×

கல்வித்தரம் குறைவதாக புகார் எதிரொலி 7 ஆசிரியர்கள் இடமாற்றம்

திருமங்கலம், ஜூன் 20: தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசியர்களுக்கு இடையே நிலவிவந்த பிரச்னையால் கல்வி தரம் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கள்ளிக்குடி ஒன்றியத்தில் 7 ஆசியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் மோசஸ் கூறுகையில், ‘மையிட்டான் பட்டி, தென்னமநல்லுார், புதுப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்குள் பிரச்னை நிலவி வந்தது. இதனால் தங்களது குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாங்கள் சம்மந்தபட்ட பள்ளிகளில் நேரடி விசாரணை நடத்தியதில் மக்களின் புகாரில் உண்மை இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூவர், பட்டதாரி ஆசிரியர்கள் மூவர் என ஆறு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்புக்குள்ளான கோபாலபுரம் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம். பள்ளிகளில் கூடுதலாக மாணவ, மாணவிகளை சேர்த்த 25 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...