×

22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, ஜூன் 20: மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில், மதுரையில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் பொறியியல் மற்றும் பட்டதாரி பணி காலியிடத்திற்கான பணியாட்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி  நடைபெற உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைநாடுனர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்களுடன் 22ம் தேதி காலை 10 மணியளவில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 0452-2564343 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல் வேலை வாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...