×

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்தும் இதுவரை புகார் வரவில்லை எனவும் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் விடுப்பில் இருந்தனர். இந்நிலையில் இருவரும் திங்களன்று நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் ஆணையிட்டுள்ளது.


Tags : Deputy Director ,Chennai's Calashethra College , Kalashetra College, Director, Deputy Director, inquiry, order to appear
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...