×

மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணியிட ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை:  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணியிட ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கான நேர்முகத் தேர்வு 02.03.2023 அன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் பல்வேறு விளையாட்டுகளைச் சார்ந்த 187 விளையாட்டு பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் 76 பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு விளையாட்டுகளை சார்ந்த 76 விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 8 விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை 17.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (31.03.2023) நேரு உள்விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் 76 விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கு பணியிட ஆணைகளை வழங்கினார்.

மேலும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுடன் விளையாட்டுப் பயிற்றுநர்கள் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்தனர். தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கு பயிற்றுநர் சீருடைகளை வழங்கினார். பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் பயிற்சியாளர்கள் துறை குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Development Commission , Minister Udayanidhi Stalin gave job orders to the sports instructors selected on behalf of the Development Commission.
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...