×

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது.... ஒரே நாளில் 14 பேர் பலி : ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்!

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை  கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் நேற்று 2151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,903லிருந்து 13,509ஆக உயர்ந்துள்ளது. இது 0.03 சதவீதமாகும். கொரோனாவில் இருந்து நேற்று 1,222 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1,396 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,41,68,321 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

ஆகவே தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம் ஆக உள்ளது.. கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு 1.19% பேர் பலி ஆகி உள்ளனர். நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 15,784 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


Tags : India ,Union Health Ministry , India, Corona, Impact, Union Ministry of Health
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...