×

நிலக்கரி வரி விதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் காங். தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில், ஒரு டன்னுக்கு ரூ. 25 வீதம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 540 கோடி வரை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், இடைத்தரகர்கள், வணிகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ராய்ப்பூர் மேயரும் காங்கிரஸ் தலைவருமான அய்ஜாஸ் தேபர், ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் துதேஜா, மதுபான தொழிலதிபர் பல்தேவ் சிங் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.




Tags : Chhattisgarh ,Cong. Enforcement Directorate , Irregularity in Coal Tax Chhattisgarh Cong. Enforcement Directorate raids the leader's house
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...