×

விலைவாசி உயர்வால் பிரிட்டனில் பலர் ஏழையாகிவிட்டனர்: நிதித்துறை அதிகாரி கருத்து

லண்டன்: விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமானம் இல்லாததால் பிரிட்டனில் பலர் ஏழையாகி விட்டதாக அந்நாட்டு நிதித்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரிட்டன் நிதியமைச்சகத்தின் வரவு, செலவு நிர்வாக அதிகாரி. அப்போது மக்களின் வருமானத்தை விட செலவுகள் இரு மடங்காகி விட்டதாக அவர் கவலை தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் பிரிட்டன் மக்கள் பொருளாதாரத்தத்தில் பெரும் பாதிப்புக்குளானார்கள்.  

இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் பேரின் தொடர்ச்சியாக பிரிட்டன் பெரும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் 41 ஆண்டுளில் இல்லாத அளவு பணம் வீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது பிரிட்டனில் பொருளாதார நிலை மோசமாக நிலையே நிலவி வருகிறது. பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும் மந்த நிலையை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரிட்டன் மைய வங்கி ஆளுநர் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.


Tags : Britain , price, rise, britain, poor, finance, official, opinion
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்