×

ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு

மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

 அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தை பின்பற்றி அணு ஆயுத மையம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள பக்முத் நகர் மீது ரஷ்யா நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதல் காட்சி வெளியாகி உள்ளது. அந்நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் உருக்குலைந்து காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவிற்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


Tags : Russia ,Belarus , European countries, Belarus, nuclear weapons center
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...