×

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப புதிய வேளாண்மை கல்லூரி: அமைச்சர் தகவல்

நெல்லை: அரசின் நிதி நிலைக்கு ஏற்ப,  புதிய வேளாண்மை கல்லூரிகள் அமைக்கும் வாய்ப்பு  உருவாகும் என நெல்லையில் வேளாண்மைத்துறை  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை  பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக, நெல்லை, தூத்துக்குடி,  தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள்  சங்க பிரதிநிதிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நடந்தது.

பின்னர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி  திட்டம் 12,500 கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.  இதற்காக 5,209 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு  கோடி ரூபாயில் விவசாயிகள் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தத்  திட்டத்தின் மூலம் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் 15 ஏக்கர் நிலத்தில்  ஒரு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு இலவச மோட்டார், மின் இணைப்பு இலவசமாக தந்து  விவசாயம் செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் படிப்படியாக தமிழகத்தில் 12,500 ஊராட்சிகளிலும்  செயல்படுத்தப்படும்.

கடந்த  ஆண்டு பட்ஜெட்டில் 4 புதிய வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என  அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமைக்கு  ஏற்ப  புதிய வேளாண்மை கல்லூரிகள் அமைக்கும் வாய்ப்பு  உருவாகும். காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து  நீக்குவது தொடர்பாக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக  அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : New College of Agriculture as per Govt Finance: Minister Information
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...