×

கலை பண்பாட்டுத்துறை வழங்கும் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விதிமுறைகள் வெளியீடு!

சென்னை: நம்ம ஊரு திருவிழா என்ற நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் பிரமாண்ட விழாக்களை தமிழக அரசு நடத்த உள்ளது என்று கூறியுள்ளனர். 13-ம் தேதிக்குள் தங்கள் கலைத்திறமை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து வீடியோக்களை கலை பண்பாட்டு துறையின் மண்டல உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளனர். ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்க கூடாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை, நெல்லை, கோவை மண்டலா கலை பண்பாட்டு மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’  என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில்  பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.
       
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது  பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து,                  கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.  

கலைக்குழுக்கள் பின்வரும் விதிமுறைகள் தவறாமல்  பின்பற்ற வேண்டும்;      

1. தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து 13.12.2022-க்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  

2. ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது.

3. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரம்;

1. மண்டலம்: உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம்
மாவட்டங்கள்: காஞ்சிபுரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
முகவரி தொடர்பு எண்: சதாவரம், கோட்டை காவல் (கிராமம்), சின்ன காஞ்சிபுரம், ஓரிக்கை (அஞ்சல்),                          காஞ்சிபுரம் - 631502. தொலைபேசி : 044 - 27269148.
                     
2. மண்டலம்: உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம்
மாவட்டங்கள்: சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல்
முகவரி தொடர்பு எண்: தளவாய்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்),
சேலம் - 636302. தொலைபேசி : 0427 - 2386197

3. மண்டலம்: உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம்
மாவட்டங்கள்: தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை              முகவரி தொடர்பு எண்: மண்டல கயிறு வாரியம் அலுவலகம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சாவூர் - 613403, தொலைபேசி : 04362 - 232252

4. மண்டலம்: உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம்  
மாவட்டங்கள்: திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர்
முகவரி தொடர்பு எண்: எண் 32, நைட்சாயில் டெப்போ சாலை, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006. தொலைபேசி :0431 - 2434122

5. மண்டலம்: சிவகங்கை உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம்
மாவட்டங்கள்: மதுரை, திண்டுகல், தேனி, ராமநாதபுரம்,  பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம்,
முகவரி தொடர்பு எண்: மதுரை - 625002, தொலைபேசி : 0452 - 2566420

6. மண்டலம்: தென்காசி    உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம்
மாவட்டங்கள்: திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி,
முகவரி தொடர்பு எண்:  870/21 அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி - 627007. தொலைபேசி: 0462 - 2553890

7. மண்டலம்: திருப்பூர் உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம்,
மாவட்டங்கள்: கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி  
முகவரி தொடர்பு எண்: தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகம், செட்டிபாளையம் பிரிவு ரோடு, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோயம்புத்தூர் - 640150, தொலைபேசி : 0422 - 2610290

Tags : Namma Uru Festival ,Department of Arts and Culture , Release of rules to participate in the Namma Uru Festival presented by the Department of Culture!
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்