×

தமிழகத்தில் முதன்முறையாக 1430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.  கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மோகன், ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் கூறுகையில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13,494 ஓய்வூதியர்களில் 1,430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2022, ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. என்றார்.

Tags : Tamil Nadu , Medical insurance card for 1430 pensioners for the first time in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...