×

ஊழல் வழக்குகளை நீண்டகாலத்துக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: தமிழகத்தில் 1983 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்குகளை நீண்டகாலத்திற்கு நிலுவையில் வைத்திருந்தாள் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்ற அண்ணாதுரை என்பவர் ஓய்வூதிய பலன்களை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை நீதிபதி சுட்டுக்காட்டியுள்ளார். அதே சமயம் 1983 முதல் 2021 வரை தமிழகத்தில் 1,635 ஊழல் தடுப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதுவும், இதனை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு வழக்குகளை முடிக்காமல் இழுத்தடிப்பது அந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லாமல் வழக்கு விசரணையை தள்ளிவைக்க கூடாது என்றும், வழக்கை இழுத்தடிப்பது ஊழல் தடுப்பு சட்டத்தை நீட்சிபெற செய்து விடுவதாக அமைந்து விடும் என்று கூறியுள்ளார்.


Tags : Corruption Case, Corrupt Action, high Court Opinion,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...