×

உருளை மசாலா குழம்பு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். பெரியவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காயைத் தனியாக அரையுங்கள். எண்ணெயைக்காயவைத்து, பட்டை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்குவதங்கியதும், தக்காளி, உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்குங்கள்.பிறகு, 2 கப் தண்ணீர் சேர்த்து உருளைக் கிழங்கு வேகும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அரைத்த தேங்காய் விழுதை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். கைவிடாமல் கிளறி, 5நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்