×

சுவர் இடித்து வீட்டினுள் சென்று அரிசியை ருசித்த காட்டு யானை: கூடலூர் அருகே பரபரப்பு

கூடலூர்: கூடலூர் அருகே வீட்டின் சுவரை உடைத்து உள்ளே சென்ற காட்டு யானை அங்கிருந்த அரிசியை ருசித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மூலவயல் 3வது டிவிசன் பகுதியில் வசிப்பவர் அப்துல்கபூர் (47). இவர், உடல்நலக் குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் இப்பகுதிக்கு வந்த காட்டுயானை வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே இருந்த சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை இழுத்து வீசியதோடு அரிசி உள்ளிட்ட தானியங்களையும் சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து சென்றுள்ளது. யானை வந்து சென்றதை பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டு சென்றனர்.

Tags : Kuddalore , A wild elephant broke down the wall and entered the house and tasted the rice: There is a stir near Kudalur
× RELATED கூடலூர் கோத்தர் வயலில் இரவில் குடியிருப்பை முகாமிடும் காட்டுயானை