×

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.394.69 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில்  உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் நேற்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்களுடன்   ஆய்வுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது; தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69  கோடியில்  இணைப்பு சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்ட பணிகளை  மேம்படுத்த  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இணைப்பு சாலை பணிகள் ரூ.294.21 கோடி மதிப்பிலும், தெரு விளக்குகள் ரூ.3.79 கோடி மதிப்பிலும், சோலார் மின் விளக்குகள் ரூ.16.99 கோடி மதிப்பிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூ.79.69 கோடி மதிப்பிலும் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் திட்டங்களுக்காக ரூ.93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க முதல்கட்டமாக 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூ.535.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Minister ,Ramachandran , Rs 394.69 crore basic facilities for forest dwellers; Information from Minister Ramachandran
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...