×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,459 பேருக்கு கொரோனா; 26 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 9,026 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,91,959 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழகத்தில் மேலும் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 28,91,959 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 9,026 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,36,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 11 பேரும், அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 8,963 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,25,988பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 5,92,64,199 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,53,046 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 1,18,017 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16,89,099 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 13,940 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 12,02,822 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 9,519 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 322 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 253.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, fatalities, health department
× RELATED புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!