×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டி..!

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு 2,981 பேர் போட்டியின்றி தேர்வு, தேர்தலில் மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு  அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.. அதன்படி, 23, 998 பதவிகளுக்கு 79, 433 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், 14, 571 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : 9th District , Final Candidate List for 9 District Rural Local Elections Released: A total of 79,433 candidates are contesting ..!
× RELATED ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!: 9...