×

மைக்ரோவேவ் அவன் சமையல் பாதுகாப்பானதா?

மைக்ரோவேவ் அவனில் இருந்து வெளிப்படும் கதிர்கள் உணவை பாதிக்கும் என்று ஒரு மித் இங்கு வெகு நாட்களாக உள்ளது. ஆனால், இதில் உண்மையில்லை. கதிர்கள் என்றால் அனைத்துமே கதிர்கள்தான். ஆற்றல் அலைக்கற்றைகளாக வெளிப் படுவதையே கதிர்வீச்சு என்கிறோம். அது அணுக் கதிராக இருந்தாலும் சரி, எக்ஸ்ரே கதிராக இருந்தாலும் சரி எல்லாமும் ஒரே பெளதிகம்தான். ஆனால், மைக்ரோவேவ் அவனில் வெளிப்படும் கதிர்கள் ஒப்பீட்டளவில் எக்ஸ்ரே கதிர்களைவிட பல மடங்கு பலவீனமானவை. மேலும், அவனில் ஓர் உணவுப் பொருள் கதிர்வீச்சால் சூடாக்கப்படுவதில்லை. அந்த உணவுப் பொருளில் உள்ள மூலக்கூறுகள் சூடாகத் தூண்டப்படுவதன் மூலமே இவ்வினை நிகழ்கிறது. இதில் கதிரின் பங்கு தூண்டல் மட்டுமே. எனவே, மற்ற சமைத்தல் முறை போலவே அவனில் சமைப்பதும் பாதுகாப்பானதே அச்சப்பட வேண்டியதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.



Tags : மைக்ரோவேவ்
× RELATED காலத்திற்கும் நிலைக்கும் வகையில்...