×

தேங்கிய குப்பை, கழிவுநீரை ஒப்பந்ததாரர் மீது கொட்டிய எம்எல்ஏ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்துவரும் கனமழையால் கன்டிவெலி பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தொகுதி சிவசேனா எம்எல்ஏ திலிப் லண்டே, தூர்வாரும் பணிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரை வரவழைத்து, அவரைக் கட்டாயப்படுத்தி மழைநீர் தேங்கிக் கிடக்கும் சாலையில் அமர வைத்தார். பின்னர், அங்கு நின்றிருந்த இரண்டு பேரை அழைத்து, ஒப்பந்ததாரர் மீது குப்பையை அள்ளிப்போடச் செய்தார். இவரது செயல், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தச் செய்தது.

இதுகுறித்து எம்எல்ஏ திலிப் லண்டே கூறுகையில், ‘சாக்கடை கால்வாய் தூர்வாருவதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருப்பவர்கள் அப்பணியை சரிவர மேற்கொள்ளாததால், மழைக்காலத்தில் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. எம்எல்ஏவாக இருக்கும் நான், தேர்ந்தெடுத்திருக்கும் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்குள்ளது. அதனால், அவ்வாறு செய்தேன்’ என்றார்.

Tags : MLA , MLA dumped accumulated garbage on sewer contractor
× RELATED சாலைக்கிராமம் அரசு மேல்நிலை...