×

சிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குனர் சதீஷ் கூறுகையில்,  ‘வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 3 சிங்கங்கள், 4 புலிகளின் மாதிரிகள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்காக, கடந்த 4ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கிடைத்த முடிவின்படி,  4 புலிகள் 1 சிங்கத்தின் மாதிரிகள் நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இறந்த நீலா  மற்றும் மற்றொரு சிங்கத்தையும் சேர்த்து இரண்டு பெண் சிங்கங்களுக்கு ‘‘சார்ஸ் கோவி-2’ பாசிடிவ் என வந்துள்ளது. மேலும், தொடர்ந்து செய்த ஆய்வில், 2 சிங்கங்களுக்கு சிறிதளவான பாசிடிவ் (சிடிவி) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிடிவி பாசிடிவ் எனக்கருதப்படும் சிங்கம் ஆரோக்கியமாக உள்ளது. நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விலங்கு தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புடன் ஆய்வக அறிகுறிகள் இருக்கிறதா என கண்டறியப்படுகிறது’ என தெரிவித்தார்.



Tags : Deputy , Intensive monitoring of the physical condition of lions: Deputy Director Information
× RELATED மது கடைகளை மூட உத்தரவு