×

தொழில் போட்டியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை-காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி :  காரைக்குடி மீன் மார்க்கெட்டில் கடை போடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் திருக்குமார் மகன் திருச்செல்வம்(29). இவர் கழனிவாசல் சந்தை அருகே உள்ள மீன்மார்க்கெட்டில் மீன் சுத்தம் செய்யும் கடை போட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த திருக்கண்ணன் என்பவரும் இங்கு மீன் சுத்தம் செய்யும் கடை வைத்திருந்தார். இவர் இறந்த பின்னர் திருச்செல்வத்தின் உறவினர் அவருடைய இடத்தில் கடை நடத்தினார்.

இது தொடர்பாக திருச்செல்வத்திற்கும், திருக்கண்ணன் மகன் முத்துமணி(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் கழனிவாசல் சந்தையில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது கடை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கத்தியை  வைத்து மாறிமாறி குத்திக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த திருச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முத்துமணி காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்தை டிஎஸ்பி அருண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து சிகிச்சையில் உள்ள முத்துமணி இடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Karaikudi , Karaikudi: A youth was stabbed to death during a shoplifting incident at the Karaikudi fish market.
× RELATED தொழில் போட்டியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை காரைக்குடியில் பரபரப்பு