×

பஞ்சமாதேவி அருகே பாசனவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு-உடனே அகற்ற கோரிக்கை

கரூர் : பஞ்சமாதேவி அருகேயுள்ள பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு சேர்ந்துள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நெரூர் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி உள்ளது. இந்த பகுதியின் வழியாக பல்வேறு பாசன நிலங்களுக்கு பாசன வசதிக்காக வாய்க்கால்கள் செல்கிறது.

இதில், ஒரு வாய்க்கால் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் முட்புதர்கள் படர்ந்துள்ளதோடு அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களும் குவிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த பொருட்களின் தேக்கம் காரணமாக வாய்க்காலில் செல்லும் தண்ணீரும் சீராக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, பாசன விவசாயிகளின் நலன் கருதி இந்த வாய்க்காலை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pandamadevi , Karur: To monitor and rehabilitate the excess of plastic waste in the irrigation canal near Panchamadevi
× RELATED புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்...