×

பிப்.5,6ம் தேதி ஜனாதிபதி வருகையால் தலைகாவிரிக்கு வர பக்தர்களுக்கு தடை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

குடகு: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி பிப்.5, 6 ஆகிய தேதிகளில்  தலைகாவிரி கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் ெதரிவித்துள்ளார்.
இதுகுறித்து மடிக்கேரியில் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,குடகு மாவட்டம் மடிக்கேரி தாலுகா சன்னிசைடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெனரல் திம்மைய்யா. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கும் குடகு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தவர். கர்னல் திம்மய்யா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றப்பட்டு இதன் திறப்பு விழா வருகிற பிப். 6ம் தேதி நடைபெற உள்ளது.

இதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இதையடுத்து ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அப்போது ஜனாதிபதி  மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தலை காவிரிக்கு செல்ல உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஹெலிபேட் அமைத்தல் போன்ற முன்னேற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜனாதிபதி வருகையையொட்டி தலை காவிரி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் பாதுகாப்பு கருதி  பிப்.5 மற்றும் பிப்.6 ஆகிய ேததிகளில் தலை காவிரிக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் யாரும் ேகாவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ேகட்டுக்கொள்ளப்படுகிறது’’. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் தெரிவித்தார்.

Tags : Devotees ,visit ,President ,Talakaviri ,announcement ,District Collector , Devotees barred from coming to Talakaviri due to President's visit on Feb. 5,6: District Collector's announcement
× RELATED மாசிமக திருவிழாவையொட்டி மகாமக...