×

சேமியா ஸ்டஃப்டு பிரெட்

எப்படிச் செய்வது?

சுடுநீரில் சேமியா, உப்பு, எண்ணெய் சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் உதிர்த்த சேமியா, கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து, சேமியா வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையை எடுத்து இரண்டு பிரெட்களின் நடுவே வைத்து வெண்ணெய் தடவி இருபுறமும் சுட்டு எடுத்து பரிமாறவும்.

Tags :
× RELATED நாட்டுக்கோழி பிரியாணி