×

வேளாண் மசோதா சட்ட நகல் எரிப்பு: கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,  புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜெ.த.வசந்த்பவுத்தா தலைமை தாங்கினார். மாநில மாணவிகள் உபகுழு உறுப்பினர் அனு, மாவட்ட  துணை செயலாளர் த.மதன்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கும்மிடிப்பூண்டி பகுதி செயலாளர் லோகநாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அஞ்சல் அலுவலகம் முன்பு வேளாண் மசோதா சட்ட நகல் திடீரென எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.


Tags : Gummidipoondi , Agriculture Bill Legal Copy Burned
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே டயர் தொழிற்சாலையில் தீ விபத்து !