×

காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்  தொடங்கி வைத்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னேற்பாடுகள் தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களுரு பெல் நிறுவனத்தின் பொறியாளர் உதவியுடன் காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பின்புறமுள்ள  காஞ்சிபுரம் மாவட்ட சேமிப்பு கிடங்கில் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் முன்னிலையில் மாவட்ட  கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ரஃபிக், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி.  தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Tags : Kanchipuram ,Collector , Verification work of electronic voting machines in Kanchipuram: Collector started
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...