×

ஊரக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊரக அலுவலக சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஊரக அலுவலக சங்க வட்டார தலைவர் பாலு தலைமை தாங்கினார். இதில் ராமநாதபுரம்  மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூட்ட முயற்சித்து, வட்டார வளர்ச்சி அலுவலரின் இருக்கைகளை சேதப்படுத்தியது. வாகனத்தில் இருந்த அரசின் சின்னத்தினை செருப்பணிந்த கால்களால்  உதைத்த பாஜக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்திட வேண்டும்.ஊரக அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Tags : office bearers , Rural office bearers protest
× RELATED 2021 பேரவை தேர்தல்: மநீம-வில் 11 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்..!!