×

கரடி தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 7.5 லட்சம் நிவாரணம்: வனத்துறை அதிகாரிகள் தகவல்

தாவணகெரே:  தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா பயலுதிப்பா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, மஞ்சப்பா. இவர் கடந்த, நவம்பர் 3-ம் தேதி பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அங்கு பசுக்களை மேய்க்க விட்டு இவர் மரத்தின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த கரடி அவர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு 7.5 லட்சம் நிவாரணம், மருத்துவ செலவு வனத்துறை சார்பாக வழங்கப்படும். அதேபோல், விவசாயின் மனைவிக்கு மாதம் தோறும் ₹2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் கிராமத்தினர் போராட்டம் நடத்துவதை கைவிட்டனர். தொடர்ந்து, கிராம பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Tags : Forest , 7.5 lakh relief for the family of a farmer who was killed by a bear: Forest officials
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...