×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 தரிசன டிக்கெட்டுக்கு நாளை முதல் முன்பதிவு

திருமலை: திருப்பதி  ஏழுமலையான் கோயிலில்  டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை ‘http//tirupathibalaji.ap.gov.in’ என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா அச்சம் காரணமாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது. ரூ.2.13 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரையில் 24 ஆயிரத்து 35 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 215 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில், ரூ.2.13 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Tags : booking ,Tirupati Ezhumalayan Temple , The first booking for a Rs 300 darshan ticket at the Tirupati Ezhumalayan Temple will start tomorrow
× RELATED சபரிமலையில் படிபூஜை 2037 வரை முன்பதிவு நிறைவு