×

முகலிவாக்கத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா : 1000 பேருக்கு அன்னதானம்

ஆலந்தூர்,நவ,28 - காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடத்தில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை விழா  முகலிவாக்கம் பஜனை கோயில் தெருவில் நடந்தது.  மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் இரா.பாஸ்கரன் தலைமையில் நடந்த இவ்விழாவுக்கு ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், பொதுக்குழு உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி கார்த்திக், கோடீஸ்வரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் துணை செயலாளர் கோல்டு பிரகாஷ், ஆலந்தூர் இளைஞரணி செயலாளர் பிரவீன் குமார், கலாநிதி மற்றும் நிர்வாகிகள் திருமாறன், ஸ்ரீதர், சசிகுமார், ஆறுமுகம், எம் கிட்டு, பிரபு, பாலாஜி, எம்.வினோத், விக்கி, செந்தில் ராஜேஷ், தீமோத்தேயு, சரவணன், சிவராமன், கோ.ஆனந்தன், ஆனந்தன், திவாகர், கமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : Mugalivakkam , Mughalization, Udayanidhi Birthday, Ceremony
× RELATED மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை