×

காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், அசோக் நகர் பகுதிகளில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அங்குள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. நேற்று மாலை வரை வெள்ள நீர் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக கே.கே.நகர் லட்சுமிசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, அழகிரி சாலை என முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கே.கே.நகர் காவல் நிலையம் தாழ்வான பகுதியில் உள்ளதால், நள்ளிரவில் காவல் நிலையத்தினுள் வெள்ள நீர் புகுந்தது. போலீசார் மணல் மூட்டைகளை காவல் நிலைய நுழைவாயிலில் அடுக்கி வைத்தனர். ஆனாலும், வரவேற்பு அறை, அய்வாளர் அறைகளில் தண்ணீர் புகுந்தது. போலீசார் பக்கெட் உதவியால் அதிகாலை வரை தண்ணீரை வெளியேற்றினர்.

Tags : police station , The police station was flooded
× RELATED சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை