×

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை : வங்கக் கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும். கடலூருக்கு 290 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு 300 கிலோ மீட்டர், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தீவிர புயல் 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ராணுவ குழுக்கள் சென்னைக்கு வருகை தரவுள்ளன.இந்நிலையில் 12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags : storm ,Nivar ,coast ,Bay of Bengal ,Meteorological Center , Bay of Bengal, Nivar storm, meteorological center, warning
× RELATED நிவர் புயலால் பாதிக்கப்பட்ட...