×

மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்: கஞ்சா வியாபாரியை விசாரித்த போலீசார் அதிர்ச்சி

கோவை: கோவையில் கைதான கஞ்சா வியாபாரி மனைவிக்கு போதை ஊசி போட்டு கூட்டாளிகளுடன் செக்ஸ் உறவில் ஈடுபட வைத்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கோவை நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு தினமும் கஞ்சா மொத்தமாக கடத்தி வரப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கோவை பெரியகடை வீதி போலீசார் உக்கடம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் 1.1 கிலோ கஞ்சா இருந்தது.

இவரின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 34 வயதான அந்த கஞ்சா வியாபாரிக்கு போதை ஊசி, மாத்திரை பழக்கமும் இருந்துள்ளது. இவருடன் மேலும் சில கஞ்சா வியாபாரிகள் நட்பாக இருந்துள்ளனர். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். போதை ஊசி, கஞ்சா போதையில் தினமும் மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். சில மாதத்துக்கு முன், இவர் தனது கூட்டாளிகள் 3 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தார். மனைவிக்கு கட்டாயப்படுத்தி போதை ஊசி போட்டுள்ளார். பின்னர் இவர் தனது கூட்டாளிகளை மனைவியுடன் உல்லாசமாக இருக்க அனுமதித்துள்ளார். இந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். போதை மயக்கத்தில் இருந்த மனைவியால் இந்த கொடுமையை தடுக்க முடியவில்லை.

அடுத்த நாள் தனது கணவரிடம் இது தொடர்பாக கேட்டபோது, ‘‘என் பேச்சை கேட்காவிட்டால் நீ விபசார தொழில் செய்வதாக சொல்லி இந்த வீடியோ பலருக்கும் அனுப்பி விடுவேன்’’ என மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மனைவி கணவரை பிரிந்து சென்று விட்டார். கணவர் தொடர்பாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தொடர்பாகவும் புகார் தர அவர் மறுத்து விட்டார். போலீஸ் பிடியில் சிக்கிய அந்த கஞ்சா வியாபாரி, பெண் கஞ்சா வியாபாரிகள் சிலருடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கஞ்சா வியாபாரத்தில் அதிக பணம் கிடைப்பதால் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் அதிகளவு ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. நகரில் கஞ்சா போதையில் உல்லாச வாழ்க்கையில் ஈடுபடும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : Sex torturer ,cannabis dealer , Cannabis, police
× RELATED 2 குழந்தைகளின் தந்தையுடன் காதல்...