×

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம்: இன்று நடக்கும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக பேசுகிறார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்க்கொள்ள திமுக தீவிரமாக களப்பணியாற்ற தொடங்கியுள்ளது. இதன் ஓரு பகுதியாக மண்டல வாரியாக 4 நாட்கள் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களின் கருத்துக்களை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும் ஆளும் அதிமுக அரசின் மக்கள் விரோத சட்டம், திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு அதிமுக அரசு செய்துள்ள துரோகங்களையும் மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். அடுத்த கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டம் மூலம் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக பேச திட்டமிட்டுள்ளார். அதாவது, “தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருக்கிணைத்து இந்த சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று(1ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக பொது செயலாளர் காணொலி காட்சி மூலமாக சிறப்புரையாற்ற உள்ளார். நாளை (2ம் தேதி) - புதுக்கோட்டை (முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா), 3ம் தேதி-விருதுநகர், 5ம் தேதி-தூத்துக்குடி, 7ம் தேதி-வேலூர், 8ம் தேதி-நீலகிரி, 9ம் தேதி-மதுரை, 10ம் தேதி-விழுப்புரத்திலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Tags : meeting ,elections ,Assembly ,DMK ,MK Stalin , Legislature election, public meeting, MK Stalin, video
× RELATED போதை பொருட்கள் விற்பனை தடுப்பு ஆலோசனை கூட்டம்