×

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு...!! இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு

இஸ்லாமாபாத்; புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். புல்வாமா தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதிலும் தாக்குதல் நடத்தியதிலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

27 பிப்ரவரியில் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய விமானப்படை போர் விமானி அபிநந்தன் வர்தா சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்தது சர்வதேச சமூகத்தில் பெரிய சலசலப்பைத் ஏற்படுத்தியது. அபிநந்தன் பிடிபட்ட போது பல பிரச்சார வீடியோக்கள் வெளிவந்தன, அவற்றில் சில பாகிஸ்தான் அதிகாரிகள் அவருக்கு முதலுதவி மற்றும் தேநீர் வழங்குவதற்கான ‘நல்லெண்ண சைகைகளை’ காட்டுகின்றன. அதுபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படையினரால் ஐ.ஏ.எஃப் விமானி கொடூரமாக தாக்கப்படுவதைக் காண முடிந்தது.

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது வான் தாக்குதல் தொடுக்கப் போவதாக எச்சரித்தது என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் தலைவர் அயாஸ் சாதிக் இன்று கூறியதாவது, “ பிப்ரவரி 2019 பிரதமர் இம்ரான் கானுக்கு வர்தமனை சமாதானத்தின் சைகை என்று விடுவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அபிநந்தன் பிடிபட்டதும் அப்போது நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு வந்த வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றத் தலைவர்களிடம் பிப்ரவரி 27 அன்று இரவு 9 மணிக்கு  இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறினார்.

இந்தியா தாக்குதல் நடத்த இருப்பதாக கூறியதும், ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்வை கொட்டியது. இந்த கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொள்ள மறுத்துவிட்டார், அபிநந்தனை போக விடுங்கள் என்று குரேஷி கேட்டுக் கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்துதான் அபிநந்தன் வர்த்தமான் வாகா அட்டாரி எல்லை வழியாக 2019ம் ஆண்டு மார்ச் முதல் தேதியில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் எம்பி குறிப்பிட்டார். இந்நிலையில் புல்வாமாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதிலும், தாக்குதல் நடத்தியதிலும் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாவத் சவுத்ரி, “புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஏற்றுக்கொள்கிறது, இம்ரான் கான் அரசாங்கத்தின் கீழ் இது மிகப்பெரிய சாதனை என்று பாராட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.


Tags : Government ,Pakistan ,attack ,Pulwama ,Imran Khan ,Parliament ,Bach , Government of Pakistan involved in Pulwama attack ... !! This is Imran Khan's greatest achievement; Bach in Parliament. Ministerial speech
× RELATED மருத்துவப் படிப்புக்கான மாணவர்...