×

பெரியார் சிலைக்கு காவி சாயம் விஷமிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயல். இதை செய்தவர்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள்தான் இத்தகைய காட்டு மிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சு கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

Tags : Periyar ,Ramadas , Periyar statue needs action on saffron dye poisons: Ramadas insists
× RELATED பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில்...