×

ரூ.11 லட்சம் மோசடி வியாபாரி கைது

திருவள்ளூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஞானபதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுத்ரி(42). விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருவள்ளூர் அடுத்த இருளஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(30) மற்றும் நாராயணன், ஜம்புலிங்கம், தாயுமானவன், சரவணன், ரமேஷ், தேவதாஸ் ஆகிய விவசாயிகளிடமிருந்து கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் ரூ.14.5 லட்சத்திற்கு நெல் கொள்முதல் செய்துள்ளார். அப்போது, முன்பணமாக ரூ.3.5 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதித்தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக ரூ.11 லட்சம் பணத்தை தராமல் அலைகழிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், தலைமறைவாகவும் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் மப்பேடு போலீசார் சவுத்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : fraudster , Rs 11 lakh fraudster arrested
× RELATED பனியன் துணி வாங்கி ரூ.1.20 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி மனு