×

2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் இயங்கும்: தமிழக தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழக அரசு அலுவலகங்கள் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இங்கும் என்று தலைமை செயலாளர்  உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:கொரோனா  தொற்று ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு, 100 சதவீத ஊழியர்களுடன் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழக அரசு அலுவலகங்கள் இயங்க  உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது உள்ளபடி 100 சதவீத ஊழியர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும். இதற்கு ஏதுவாக  ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government offices ,Chief Secretary ,Tamil Nadu , Government offices will be open 5 days a week from January 1, 2021: Order of the Chief Secretary of Tamil Nadu
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை...