×

ஃப்ரீஸ்டைல் ஃபுட்பாலில் சாதனை!

நன்றி குங்குமம்

கால்பந்து போட்டியின்போது நிகழ்த்தப்படும் பல சாகசங்கள் அசாதாரணமானவை. அதில் ஒன்று, ரசிகர்களை உற்சாகப்படுத்த கால்பந்து வீரர்கள் பந்தை கை, கால், முதுகு என உடலின் பல பாகங்களில் சுழலவிட்டு ஸ்டைல் காட்டி ஆடுவது. இப்படி ஸ்டைல் காட்டுவதே ஒரு விளையாட்டாகிவிட்டது. அதற்குப் பெயர் ‘ஃப்ரீஸ்டைல் ஃபுட்பால்’. இந்த ஆச்சரிய விளையாட்டில் வித்தைகளைக் காட்டி இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளும் இளைஞர் ரியூ. டோக்கியோவைச் சேர்ந்த இவர் லாக்டவுனில் நேரம் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்திருக்கிறார்.

அப்போது ஃப்ரீஸ்டைலில் புதுப்புது டெக்னிக்கை கண்டுபிடித்து இணையத்தில் தட்டிவிட, எல்லா ஸ்டைலும் வைரலாகிவிட்டது. லேட்டஸ்ட்டாக வாயில் ஒன்று, முழங்கால்களில் இரண்டு, பாதங்களில் இரண்டு என மொத்தமாக ஐந்து பந்துகளை ஒரே நேரத்தில் சுழலவிட்டு ஃப்ரீஸ்டைலில் சாதனை படைத்திருக்கிறார். இதுவரை ஃப்ரீஸ்டைல் ஃபுட்பாலில் ஐந்து பந்துகளை ஒரே நேரத்தில் யாருமே கையாளவில்லை!

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : Achievement in freestyle football!
× RELATED நீட் தேர்வில் தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளி சாதனை