×

தாயின் கள்ளக்காதலன் பலாத்காரம் செய்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சேங்கதோப்புவை சேர்ந்தவர் கணேசன்(32). திருமணமாகாத இவர், ேசாப்பு கம்பெனி ஏஜென்சியில் கடைகளுக்கு சோப் சப்ளை செய்து வருகிறார். இவருக்கு, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த 32 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண்ணுக்கு 11வயதில் ஒரு மகள் இருந்தார். இந்த நிலையில், கணேசன் அந்த பெண்ணின் வீட்டுக்கு பகல், இரவு நேரங்களில் சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கணேசனுக்கு, அந்த 11 வயது மகள் மீதும் மோகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கள்ளக்காதலி ெவளியில் சென்றதை தெரிந்து கொண்ட கணேசன், அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் தான் வாங்கி வந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளார். இதை குடித்த சிறுமி சிறிதுநேரத்தில் அரை தூக்கத்தில் இருந்துள்ளார். அப்போது கணேசன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சென்றுவிட்டார். தூக்கம் கலைந்து கண்விழித்த சிறுமி தனது அலங்கோல நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அவமானத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார், போக்சோ சட்டம், தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவுகளில் கணேசனை நேற்று கைது செய்தனர்.

Tags : suicide , The girl committed suicide by hanging herself after being raped by her mother's false boyfriend
× RELATED பூமி பூஜை விழா வயிற்று வலியால் அவதி இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை