×

சொத்து பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக புகார்..!! மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்..!!

நாகை:  சொத்து பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கோரி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள, சொத்து தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்பிற்கு ஆதரவாக மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர் மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனையடுத்து சொத்து பிரச்சனையில் தலையிட்ட காவல் ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station ,protest ,Mayiladuthurai ,Dharna , Property dispute,property problem .. !! Dharna protest ,Mayiladuthurai police station ,
× RELATED பண மோசடி புகாரை வாங்க மறுப்பு; காவல்...