×

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர் அடிப்படையில் மாநிலத்தில் காஞ்சிபுரம் முதலிடம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அடிப்படையில் மாநிலத்தில் காஞ்சிபுரம் முதலிடம் பிடித்தது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது.  
இத்தேர்வு எழுத மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் விண்ணப்பித்து இருந்தனர். அந்த அடிப்படையில் தேர்ச்சியில் மாணவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

பொதத்தேர்வு எழுத காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 52741 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 26701 மாணவர்கள், 26040 பேர் மாணவியர். இவர்களின் பருவத் தேர்வு, வருகை பதிவேடு அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் விண்ணப்பித்தோர் 50,916 பேர். இவர்களில் மாணவர்கள் 25,691 பேர். மாணவியர் 25,225 பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் விண்ணப்பித்தோர் 49,235 பேர். அவர்களில் மாணவர்கள் 23,938 பேர், மாணவியர் 25,297 பேர் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்துள்ளனர். காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளில் இப்போது தான் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 5,988 மாணவர்கள் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளை சேர்ந்த 5,988 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் 2,896 பேர், மாணவிகள் 3,092 பேர். இதில் 35 பேர் 450க்கு மேலும், 170 பேர் 400க்கு மேலும், 493 பேர் 350க் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Tags : applicants ,examination ,Kanchipuram ,state , 10th Class Exam, Applicant, State, Kanchipuram first place, 20 years, then record
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...