×

மாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 320 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,890 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 268 ஆகவும் உயர்ந்துள்ளது. இதையடுத்து 320 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை, 12,153 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 3,469 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Corona ,district , In the district, for 320 persons, Corona
× RELATED தருமபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு