×

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்கள் ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு: கொரோனா தொற்று 5,063 பேருக்கு உறுதியானது

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 108 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. நேற்று மட்டும் 108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் நேற்று 55,122 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5,063 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தமிழகத்தில் ஒட்டு மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு நாளில் ஆண்கள் 3,041 பேர், பெண்கள் 2,022 பேர் பாதிக்கப்பட்டனர். 4ம் தேதி ஒரு நாளில் மட்டும் 6,501 பேர் குணமடைந்தனர். இது நேற்று ெதாற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைய விட குறைவு. மாநில அளவில் 2,08, 784 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 55,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே சமயம் வருத்தமளிக்கும் வகையில் நேற்று 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 25 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 23 பேர், கன்னியாகுமரி 9, செங்கல்பட்டு 8, கோவை 7, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லையில் தலா 6 பேர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர், கடலூர், சேலம், விருதுநகரில் தலா 3 பேர், வேலூர், திருச்சி, திருப்பூர், திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், தருமபுரி, திண்டுக்கல், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 108 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது.

Tags : deaths ,Tamil Nadu ,Corona , In Tamil Nadu, increasing deaths, 108 deaths in a single day, corona 5,063, confirmed
× RELATED 68 பேர் மரணம் தமிழகத்தில் ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா