×

மூதாட்டி வீட்டில் கொள்ளை வாலிபர் சிக்கினார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெபசுந்தரி (65). இவர் வீட்டின் அருகில் வீடு கட்டுவதற்கு தேவையான தென்னை ஓலை மற்றும் கட்டைகள், விறகுகள் ஆகியவை விற்பனை செய்யும் கடை நடத்தி  வருகிறார். நேற்று கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு ஜெபசுந்தரி மீண்டும் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் இருந்த 8 சவரன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதுசம்மந்தமாக மூதாட்டியின் கடையில் வேலை செய்த விக்னேஷ் (20) என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அதில், நகை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த வாலிபர் திருடிய நகையை சீத்தஞ்சேரி கிராமத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த நகையை மீட்டனர். தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : house ,robber , Grandmother's house, robbery, teenager
× RELATED வீடு இருக்கு... பணம் பட்டுவாடா செய்த...