×

காதர் மொகிதீனுக்கு கொரோனா

திருச்சி: தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாகை எம்.பி. செல்வராசு, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், ஒரத்தநாடு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொகிதீனுக்கு(75) சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Corona ,Kather Mohiuddin , To Kather Mohiuddin, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...