×

நிலுவைத் தொகைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஊழியர்கள் ‘இ-மெயில்’ போராட்டம்: போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைத்தனர்

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என இ-மெயில் மூலமாக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கர்சன் கூறியதாவது: கோவை, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து எங்களது சங்கத்தின் சார்பில் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தந்த போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : protest ,Department of Transportation , Arrears, pay, retired employees, ‘e-mail’ struggle, Department of Transportation
× RELATED கண்டன ஆர்ப்பாட்டம்