×

சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்றால் மதுக்கடையை அரசு மூடுமா?..தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்துணவு முட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மதுக்கடையில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றபடுகிறதா என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது. மாணவர்களுக்கு முட்டை வழங்க என்ன திட்டம் உள்ளது என்பதை தமிழக அரசு நாளை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : government ,liquor store ,Tamil Nadu ,iCourt , Social Gap, Liquor Store, Government of Tamil Nadu, iCourt
× RELATED சித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா?!