×

வரத்து அதிகரிப்பால் விலையில் சரிந்தது உளுந்து: மூட்டைக்கு 1,500 வரை சரிவு

விருதுநகர்:  வரத்து அதிகரிப்பால் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு 1,500 வரை சரிந்துள்ளது. பாமாயில் டின்னுக்கு 20 உயர்ந்துள்ளது. கொரோனா முடக்கம், வேலையிழப்பு, மக்களிடம் வாங்கும் சக்தி குறைவால் உணவுப்பொருட்கள் விற்பனை மந்தமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பால் ஊரடங்கு, தொழில்கள் முடக்கத்தால் வேலையிழந்த மக்கள் பணப்புழக்கமின்றி வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். பள்ளி, கல்லூரி கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பணமின்றி திணறி வருகின்றனர். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் பெய்யும் மழையால் பாசிப்பயறு புதுவரத்து ஈரப்பதமாக வருவதால், மூட்டைக்கு 10 கிலோ பயறு சேதமாகிறது. சேதம் அதிகமாவதால் பாசிப்பருப்பு விலை குறையவில்லை.

ஆந்திரா, கர்நாடகா, பர்மாவில் இருந்து புதுஉளுந்து வரத்து காரணமாக உளுந்தம்பருப்பு மூட்டைக்கு 1,500 வரை குறைந்துள்ளது. (அடைப்பிற்குள் கடந்த வார விலை) ஆந்திரா உளுந்து (100 கிலோ) - 7,500 (8,300), தஞ்சை உளுந்து  - 7,300 (8,200), பர்மா உளுந்து  - 6,800 (7,700), உருட்டு உளுந்தம்பருப்பு லயன்  - 9,500 (11,000), தஞ்சை உளுந்தம்பருப்பு  - 10,000 (11,000), உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா  - 9,200 (10,000). மலேசியாவில் குரூட் பாமாயில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பாமாயில் டின்  (15 கிலோ)  - 1,370 (1,350). நிலக்கடலைப்பருப்பு வரத்து குறைவால் மூட்டைக்கு 150 உயர்ந்துள்ளது. பருப்பு விலை உயர்வால் புண்ணாக்கு மூட்டைக்கு 100 அதிகரித்துள்ளது. நிலக்கடலைப்பருப்பு (80 கிலோ)  - 7,150 (7,000), கடலை புண்ணாக்கு (100 கிலோ)  - 5,500 (5,400).

Tags : Pulses, price decline
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...