×

மத்திய அரசின் தடையை மீறி வெப்சைட் மூலம் ஜோராக செயல்படும் சீன ஆப்ஸ்கள்: பெங்களூரு நிறுவனத்தால் கோல்மால் அம்பலம்

புதுடெல்லி: லடாக் விவகாரத்தை தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளதாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு  மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. ஆனால், மேற்கண்ட ஆப்கள் சில வெப்சைட்கள் மூலம் இயங்குவதாகவும், முழுமையாக இவை தடை செய்யப்படவில்லை எனவும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது: 33 ஆப்ஸ்கள் மட்டுமே முழுமையாக இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

எஞ்சிய 26 ஆப்ஸ்களில் 9 ஆப்ஸ்கள் அதற்கு இணையான பிரத்யேக வெப்சைட்கள் மூலம் எந்த வித தடையும் இல்லாமல் முழுமையாக இயங்கி வருகின்றன. 11 ஆப்ஸ்கள் முழுமையாக இயங்காவிட்டாலும், ஓரளவு பயன்படுத்தும் வகையில் உள்ளன. மேலும், 59 ஆப்ஸ்களில் 39 ஆப்ஸ்களுக்கு பிரத்யேக வெப்சைட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 20 ஆப்ஸ்களுக்கு வெப்சைட்கள் இல்லை. தடை செய்யப்பட்ட சீன ஆப்ஸ்களை இணையதளங்கள் மூலம் இயங்க அனுமதிக்கப்பட்டு இருப்பது தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

* இதுவும் அதே மாதிரி தானா?
இந்தியாவில் ஆபாச வெப்சைட்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மற்ற இணையதளங்களின் மூலமாக இந்த ஆபாச வெப்சைட்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல், சீனாவின் தடை செய்யப்பட்ட 59 ஆப்ஸ்களும் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

Tags : Bangalore ,Chinese ,company ,government ,Golmal , Federal Government Ban, Through Website, Chinese Apps, Bangalore Company, Golmaal, Exposed
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...